Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Super User / 2011 நவம்பர் 20 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆகில் அஹமட்)
தேசத்துக்கு மகுடம் நிகழ்வை முன்னிட்டு அநுராதபுர மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் நடமாடும் சேவையின் ஒரு கட்டமாக இன்று ஞாயிறுக்கிழமை அநுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்தில் கிழக்கு நுவரகம் பகுதி பிரதேச செயலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட நடமாடும் சேவை நடைபெற்றது.
இந்நிகழ்வில் வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க, மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரல்லியத்த, மாகாண அமைச்சர் எச்.பீ.சேமசிங்க, மாகாண சபை உறுப்பினர்களான கல்யாணி கரல்லியத்த, உபாலி உள்ளிட்ட பலரும் நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்நடமாடும் சேவையில் 53 அமைச்சுக்களும் 30 திணைக்களங்களும் பங்குபற்றியதுடன் பல்லாயிரக்கணக்கானவர்கள் தமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளும் நோக்கில் வருகைதந்திருந்தனர்.
இதன்போது, கண்பார்வையற்றவர்களுக்கு இலவசமாக மூக்குக்கண்ணாடிகளும் வழங்கப்பட்டதுடன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விவசாய உபகரணங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
25 May 2025