Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 நவம்பர் 22 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆகில் அஹமட்)
அநுராதபுரம் தலைமையகப் பொலிஸ் நிலைய போக்குவரத்துப்பிரிவு பொலிஸ் சார்ஜன் ஒருவர் 25,000 ரூபா இலஞ்சம் பெற்றாரென்ற குற்றச்சாட்டில் நேற்று திங்கட்கிழமை முதல் தனது சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
அநுராதபுர நகரத்திலுள்ள வர்த்தகரொருவரிடம் அவரது வாகனத்திற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில்,
அவ்வர்த்தகருக்கு எதிராக வழக்குத் தொடராமலிருப்பதற்கு 25,000 ரூபா பணத்தை இலஞ்சமாக குறித்த பொலிஸ் சார்ஜன் பெற்றுக்கொண்டதாக அநுராதபுரம் தலைமையகப் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பாலித்த நிஸ்ஸங்க தெரிவித்தார்.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னரே குறித்த பொலிஸ் சார்ஜன் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
25 May 2025