Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 நவம்பர் 27 , மு.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்,ஏ.எஸ்.எப்.ஜெஸீரா,ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)
வடமேல் மாகாணசபையின் நிர்வாகத்தின் கீழிருந்த சிலாபம் வைத்தியசாலை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரும் நிகழ்வு சிலாபம் வைத்தியசாலையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
மாகாண நிர்வாகத்தின் கீழியங்கிய சிலாபம் வைத்தியசாலையானது மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதன் மூலம் புத்தளம் மாவட்டத்திலுள்ள மத்திய அரசின் நிர்வாகத்தில் இயங்கும் ஒரே வைத்தியசாலையாக மாறியுள்ளது. இன்றைய வைபவத்தின்போது பெறுமதியான மருத்துவ இயந்திரங்களும் சுகாதார அமைச்சரினால் வழங்கப்பட்டன.
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, வெளிவிவகார பிரதியமைச்சர் நியோமல் பெரேரா, வடமேல் மாகாணசபை முதலமைச்சர் அத்துல விஜேசிங்க, வடமேல் மாகாண சுகாதார அமைச்சர் அசோக வடிகமங்காவ, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் அன்டனி பெரேரா உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
7 hours ago
9 hours ago