Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 டிசெம்பர் 02 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆகில் அஹமட்)
றம்பாவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட வெஹரகல கிராமம் முன்மாதிரி விவசாய கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக மஹகனந்தராவ விவசாய அபிவிருத்தி அதிகாரி யூ.என்.ஹேமகுமாரி தெரிவித்தார்.
அநுராதபுரம், ஒயாமடுவ பகுதியில் நடைபெறவுள்ள தேசத்துக்கு மகுடம் கண்காட்சி மற்றும் அபிவிருத்தி திட்டங்களின் கீழ் இக்கிராமம் முன்மாதிரி விவசாய கிராமமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
வெஹரகல கிராம விவசாய சங்கத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் 125 ஏக்கர் நிலப்பரப்பில் சோளம், உழுந்து, பயறு, மரக்கறி வகைகள் என்பன பயிரிடப்படுவதுடன் இவற்றுக்குத் தேவையான உயர் ரக வித்துக்கள் உள்ளிட்ட பொருட்களும் உபகரணங்களும் இலவசமாக பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
இவற்றுக்கு மேலதிகமாக தெரிவுசெய்யப்பட்ட 75 விவசாய குடும்பங்களுக்கு வீட்டுத்தோட்டச் செய்கை தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களுக்கும் தேவையான உயர்ரக வித்துக்கள் உள்ளிட்ட பொருட்களும் உபகரணங்களும் இலவசமாக பகிர்ந்தளிக்கப்படவுள்ளன எனவும் மஹகனந்தராவ விவசாய அபிவிருத்தி அதிகாரி யூ.என்.ஹேமகுமாரி மேலும் தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago