2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் நகர சபைக்குற்பட்ட பிரதேசங்களில் சிரமதான நடவடிக்கை

Kogilavani   / 2011 டிசெம்பர் 07 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
புத்தளம் நகர சபைக்குற்பட்ட பிரதேசங்களில் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான புத்தளம் நகர சபை ஊழியர்களின் மூலம் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டு  வருகின்றது.

புத்தளம் நகர சபைக்குற்பட்ட நகர் பகுதி மற்றும் தில்லையடி, ரத்மல்யாய ஆகிய பகுதிகளிலும் இந்த சிரமதானம் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நகர சபைக்குச் சொந்தமான இரு வாகன உதவியுடன், நகர சபை ஊழியர்கள் இந்த சிரமதானத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தளம் நகர சபைக்குற்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளில் டெங்கு நுளம்பு பெருகக் கூடிய இடங்களை அடையாளம் கண்டறியப்பட்டால்  அதற்கு தண்டப்பணம் அறவிடப்படும் என நகர சபை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X