2025 ஜூலை 17, வியாழக்கிழமை

புதையல் தோண்ட முயற்சித்த பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த இருவர் கைது

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 12 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தும் பொருட்களுடன் பதவிய, இஸன்னாவ பிரதேசத்தில் வைத்து முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரையும் சிவில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பதவிய பொலிஸார் தெரிவித்தனர்.

கெப்பிட்டிகொள்ளாவ பகுதியில் புதையல் தோண்டுவதற்காக வந்துள்ளதாக சதேகிக்கப்படும் இவர்கள் இருவரும் பொலிஸாரிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்காக பஸ் வண்டியொன்றில் பதவிய பகுதியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாகவும் பதவிய பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X