2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் மக்கள் வெள்ளம்

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 05 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அநுராதபுரம் மாவட்டத்தின் தந்திரிமலையிலுள்ள ஓயமடுவ கிராமத்தில் நடைபெற்றுவரும் 'தேசத்திற்கு மகுடம்' கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக பெரும் எண்ணிக்கையான மக்கள் கடல் போல் திரண்டவண்ணமுள்ளனர்.

ஆறாவது வருடமாக நடைபெற்றுவரும் இத் தேசியக் கண்காட்சி ஓயமடுவ கிராமத்திலுள்ள 600 ஏக்கர் நிலப்பரப்பில் பாரியளவில் மேற்கொள்ளப்படுகின்றது. இக்கண்காட்சி எதிர்வரும் 10ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இப்பகுதியைச் சூழவுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதுடன், வீதி அபிருத்திக்காக 30,000 மில்லியன் ரூபா  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் அபிவிருத்தியை மேம்படுத்தும் வகையில் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு நிரந்தரமான 10 கட்டடங்களை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

அநுராதபுர மாவட்டத்தின் விலாச்சியா பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஓயமடுவ கிராமத்தில் சுமார் 6,000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு 700 மில்லியன் ரூபா செலவில் பல மின்சார விநியோகத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

'தேசத்திற்கு மகுடம்' கண்காட்சியில் அனைத்து அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சிக்கு விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டட் ஊடக அனுசரணை வழங்கியுள்ளது. (ஹபீல் பரிஸ்,பிரதீப் பத்திரன)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .