2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 07 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலாம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த  ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று செவ்வாய்க்கிழமை மரணமடைந்துள்ளார்.

கஹட்டகஸ்திகிலிய கிரிபாவையைச் சேர்ந்த ரீ.றஸ்மின் (வயது 30) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு மரணமடைந்தவர் ஆவார்.

கஹட்டகஸ்திகிலிய – றத்மல்கஹவௌ வீதியில் வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையோரமிருந்த மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளானதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் நிலைய போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். 

காயமடைந்த நபர் கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்   மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .