2025 மே 24, சனிக்கிழமை

பொலன்னறுவை வேட்பாளருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட மாட்டாது: பேர்ட்டி

Super User   / 2012 ஜூலை 21 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமத்திய மாகாணசபையின் முதலமைச்சர் பதவியானது பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த வேட்பாளருக்கு வழங்கப்பட மாட்டாது என  கலைக்கப்பட்ட வடமத்திய மாகாண சபையின் முதலமைச்சர் பேர்ட்டி பிரேமலால் திஸாநாயக்க கூறியுள்ளார்.

'அநுராதபுரத்தில் 7 தொகுதிகள் உள்ளன. பொலன்னறுவையில் 3 தொகுதிகளே உள்ளன அநுராதபுரத்திலேயே அதிக எண்ணிக்கையான மக்கள் உள்ளனர். எனவே அநுராதபுரத்தைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவருக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.

அரசியல் அனுபவமற்ற வேட்பாளர்கள் சிலர் அரசியல் அனுகூலங்களுக்காக பல்வேறு வதந்திகளை பரப்புவதாகவும் அவர் தெரிவித்தார். 'சிலர் அரசியல் நலன்களுக்காக  வதந்திகளை பரப்புகின்றனர். ஆனால், உண்மை என்னவென்றால் சிரேஷ்டத்துவம், அதிக அரசியல் அனுபவமுடைய வேட்பாளருக்கே  முதலமைச்சர் பதவி வழங்கப்படும்' என அவர் கூறினார். (அதுல பண்டார)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X