2025 மே 24, சனிக்கிழமை

'தெதுருஓயாகம பள்ளிவாசல் மீதான அசம்பாவிதங்கள் பொலிஸ் மா அதிபரின் தலையீட்டினால் கட்டுப்பாட்டுக்குள்'

Super User   / 2012 ஜூலை 25 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருணாகல், தெதுருஓயாகமவிலுள்ள அல்– அக்ரம் ஜும்ஆ பள்ளிவாசலில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற அசம்பாவித சம்பவங்கள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் தலையீட்டை அடுத்து, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபையின் பதில் பொது செயலாளர் தாஸீம் மௌலவி தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இப்பள்ளிவாசல் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் பௌத்த பிக்குமார் தலைமையில் சுமார் 200 பேர் கொண்ட குழுவினரினால் முற்றுகையிடப்பட்டது. இதன்போது, பள்ளிவாசலுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன் பிரித் ஓதல் நிகழ்வும் இடம்பெற்றது.

இது தொடர்பில், மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா, சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபையின் பதில் பொது செயலாளர் தாஸீம் மௌலவி மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம்.அமீன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இது தொடர்பில் நான் உடனடியாக பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தெரியப்படுத்தினேன். இதனையடுத்து சில மணிநேரங்களில் குறித்த பள்ளிவாசலுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன் ஆர்ப்பாட்டக்காரர்களும் அகற்றப்பட்டனர்" என்றார்.

இப்பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டமைக்காக பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனிற்கு இலங்கை முஸ்லிம்கள் சார்பாக  அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபை நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் இரவு 10.30 மணியளவில் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் தன்னை தொடர்புகொண்டு குறித்த பிரச்சினை மீண்டும் ஏற்பாடத வகையில் பொலிஸார் நடவடிக்கை எடுப்பர் என உறுதியளித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இப்பள்ளிவாசலுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை இரவு முதல் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என தெதுருஓயாகம அல்– அக்ரம் ஜும்ஆ பள்ளிவாசலின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

கடந்த 18 வருடங்களுக்கு மேலாக குறித்த பள்ளிவாசல் இயங்கி வருகின்றது. எனினும் இப்பள்ளிவாசலுக்கு சிலரால் தொடர்ச்சியாக தொந்தரவுகள் விளைவிக்கப்பட்டு வருவதாகவும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் குறிப்பிட்டனர்.

You May Also Like

  Comments - 0

  • hameed ali Wednesday, 25 July 2012 11:22 AM

    Temporary solution.
    Permanent solution must be done. Why cannot prosecute them?
    If Muslims do the same crime, what will happen to our community?

    Reply : 0       0

    hameed ali Wednesday, 25 July 2012 11:28 AM

    இது ஓர் கண்துடைப்பு நடவடிக்கை. குற்றம் செய்தவர்கள் ஏன் தண்டிக்கப்படவில்லை?

    Reply : 0       0

    rifas Wednesday, 25 July 2012 01:19 PM

    நமது முஸ்லிம் அரசியல்வாதிகள் இதனை மறுப்பர் அலலது நியாயப்படுத்துவர்.

    Reply : 0       0

    najeeb Wednesday, 25 July 2012 01:35 PM

    ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடு !

    Reply : 0       0

    safry Wednesday, 25 July 2012 02:23 PM

    இந்த நாட்டில் என்ன நடக்கிறது?? பார்க்கையில் " முழித்திருக்க விழியை திருடும் கதை" போல் இருக்கிறது??

    Reply : 0       0

    Kanavaan Wednesday, 25 July 2012 04:09 PM

    அரசில் உள்ள முஸ்லிம் அமைச்சர்களும், அரசிற்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் தனித்துவக் கட்சித் தலைவரும் இதற்கு என்னதான் சாட்டுக் கூறப் போகிறார்களோ?

    Reply : 0       0

    Abu Chucki Wednesday, 25 July 2012 07:53 PM

    அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களினால்தானே, இது தடுக்கப்பட்டது. எல்லாவற்றிற்கும், மற்றவர்களை குறை கூறுவது புத்திசாலித்தனமல்ல.

    Reply : 0       0

    செம்பகம் Thursday, 26 July 2012 04:00 AM

    இறைவா எமது சமூகத்தை அந்நியவர்களிடமிருந்து நீதான் காப்பாற்ற வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X