2025 மே 24, சனிக்கிழமை

பல்கலை விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளன உறுப்பினர்களின் கூட்டம்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 27 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆகில் அஹமட்)


பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளன உறுப்பினர்கள் தமது வேலை நிறுத்தம் தொடர்பாக பொதுமக்களையும் புத்திஜீவிகளையும் அறிவுறுத்தும் வகையில்  நேற்று வியாழக்கிழமை மாலை கூட்டமொன்றை நடத்தினர்.

அநுராதபுரம் சீ.டீ.சீ. மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமக்குரிய சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும், கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை 6 வீதமாக உயர்த்த வேண்டும், பல்கலைக்கழகங்களில் அரசியல் தலையீடுகளை இல்லாதொழிக்க வேண்டும் ஆகிய 3  கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரையில் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகக் கூறினர்.

இக்கூட்டத்தில் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளன செயலாளர் டெரன்ஸ் மதுஜித், உபதலைவர் ஆனந்த ஜயவிக்கிரம, முன்னாள் உபசெயலாளர் பிரபாத் ஜயசிங்க ரஜரட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்க தலைவர் பீ.டீ.எம்.கே.பலிஹேன, பேராசிரியர் சரத் ஹெட்டியாரச்சி, விரிவுரையாளர்களான துசித அமரசேகர, ஏ.எல்.எம்.ஜெமீல், எம்.சக்கீல் உள்ளிட்டவர்களுடன் பெரும் எண்ணிக்கையான புத்திஜீவிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X