2025 மே 24, சனிக்கிழமை

மூவின மக்களின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களை நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2012 ஜூலை 27 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல்லாஹ்)

சமாதானத்திற்கு குந்தகம் விளைவிக்கும்  செயல்களை தடுத்து நிறுத்து மாறு  கோரியும் இப் பிரதேசத்தில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழும் நிலைக்கு குந்தகம் ஏற்படுத்தும் செயல்களை  தடுத்து நிறுத்துமாறு கோரியும் திகழியில் ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றது.

திகழி ஜும்ஆ மஸ்ஜிதில் ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து  ஆரம்பமாகிய அமைதி ஊர்வலம் புத்தளம் கல்பிட்டி பிரதான பாதையூடாக குறித்த காணியை நோக்கி முன்னேறியது.

அமைதி ஊர்வலத்தை புத்தளம் பொலிஸ் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.கே.சுமனசேன தலைமையிலான குழுவினர் தடுத்து  நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் இந்த விடயத்தை தீர்த்து வைப்போம் என்று கூறி நாளை காலை இது  தொடர்பான கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. 

புத்தளம் பொலிஸ் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் உறுதி மொழியைத் தொடரந்து ஊர்வலம் சென்றவர்கள் கலைந்து சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X