2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்டுவந்த மூவர் கைது

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 02 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

வீதிகளில் செல்லும் பெண்களிடமிருந்து தங்கச் சங்கிலிகளை அறுத்தெடுத்துக் கொண்டு தப்பிச் செல்லும் குழுரவைச் சேர்ந்த மூவர் இன்று வியாழக்கிழமை பகல் தங்கொட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்டதாக சொல்லப்படும் மூன்று தங்கச் சங்கிலிகளுடன் இவர்கள் கொள்ளைக்காகப் பயன்படுத்தப்படும் இரண்டு மோட்டார் பைசிகள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவர்கள் வென்னப்புவ, மாராவில, தும்மலசூரிய, பன்னல போன்ற பிரதேசங்களிலேயே இவ்வாறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தங்கொட்டுவ மாவத்தகம, கம்பிவத்தை எனும் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தற்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் அறிய வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வரும் தங்கொட்டுவ பொலிஸார் அவர்களை இன்று மாலை மாரவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X