2025 மே 24, சனிக்கிழமை

சிலாபம் வைத்தியசாலை முன்பாக ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 12 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா )


மக்களுக்கு தகவல்களை தெரிந்துகொள்வதற்கான உரிமையை வலியுறுத்தி சிலாபம் வைத்தியசாலை முன்பாக நேற்று சனிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியிலாளர்கள்,  சிவில் அமைப்பினர், சுதந்திரத்திற்கான அரங்கம் அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு தகவல்களை வழங்குவதை  புத்தளம் மாவட்டத்தில் உள்ள அரசாங்க நிறுவனங்கள் பல நிராகரித்து இடையூறுகளை ஏற்படுத்துவதாகவும் புத்தளம் மாவட்ட ஊடகவியிலாளர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார். இவ்வாறான நிறுவனங்களில் சிலாபம் வைத்தியசாலை ஒன்று எனவும் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் முறையிட்டு எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாகவும் அவர்  தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X