2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சிலாபம் முன்னேஸ்வரர் கோவிலுக்கு கலாசார உடையில் வருமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 16 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

சிலாபத்தில் பிரசித்திபெற்ற ஸ்ரீமுன்னேஸ்வர கோவிலின் வருடாந்தத் திருவிழாவில் எதிர்வரும் 26ஆம் திகதி மாலை தீ மிதிப்பும் 30ஆம் திகதி காலை இரதோற்சவமும் 31ஆம் திகதி முற்பகல் தீர்த்தோற்சவமும் நடைபெறும் என தேவஸ்தான தர்மகர்த்தாவும் பிரதான குருவுமாகிய பிரம்மசிறி பத்மநாப குருக்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இதனை முன்னிட்டு விசேட போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து தமிழ், சிங்கள பக்தர்கள் வருவதாகக் கூறிய அவர்,  கோவிலுக்கு வருபவர்கள் கலாசாரத்தை பேணும் வகையான ஆடைகளை சிறந்த முறையில்  அணிந்துவருமாறும் கேட்டுக்கொண்டார்.

ஸ்ரீமுன்னேஸ்வர கோவிலின் வருடாந்தத் திருவிழா கடந்த 4ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X