2025 மே 24, சனிக்கிழமை

நெடுங்குளத்தை நவீன வசதிகளுடன் புனரமைக்க நடவடிக்கை

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 21 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம் நகர சபைக்குற்பட்ட மிகவும் பலமை வாய்ந்த மற்றும் மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருக்கின்ற நெடுங்குளம் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்படவுள்ளதாக புத்தளம் நகர சபைத் தலைவரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளருமான கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இந்தக் குளத்தின் ஊடாக புத்தளத்திலுள்ள மக்கள் தமது நீர்த் தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர். தற்போது இக்குளத்தில் நீர் வற்றிக் காணப்படுகிறது. எனவே இக்குளத்தைப் புனரமைப்பதன் ஊடாக மக்களின் நீர் தேவைகளை ஓரளவுக்கு நிறைவேற்ற முடியும் என எதிர்பார்க்கிறோம்.

மூன்று கட்டங்களாக புனரமைப்புச் செய்யப்படவுள்ள இக்குளத்தின் முதலாவது கட்டப் புனரமைப்பு பணிகளுக்கென இரண்டு மில்லியன் ரூபா ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X