2025 மே 23, வெள்ளிக்கிழமை

நெடுங்குளத்தை புனரமைப்புச் செய்வதற்கு நடவடிக்கை

Kogilavani   / 2012 செப்டெம்பர் 14 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
புத்தளம் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள நீர் தட்டுப்பாட்னை நிவர்த்தி செய்யும் நோக்கில் நெடுங்குளத்தை புனரமைப்புச் செய்வதற்கு புத்தளம் நகரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக புத்தளம் நகரசபை தலைவர் கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.

புத்தளம் மற்றும் கற்பிட்டியில் தற்போது நிலவி வரும் கடும் வரட்சி காரணமாக பிரதேசத்தில் நீருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன் விவசாய செய்கையும் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வரட்சிக் காரணமாக பிரதேசத்திலுள்ள தென்னந்தோட்டங்களில் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதனால் தேங்காயின் விளைச்சல் குறைவடைந்துள்ளன.

அத்துடன் கற்பிட்டி பிரதேசத்திலுள்ள விவசாய நிலங்களும் இவ்வரட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், தென்னை மரங்கள் மற்றும் விவசாய உற்பத்திகள் என்பனவற்றுக்கு பவுசர்கள் மூலமே நீர் ஊற்றப்படுகிறது.

அத்துடன் புத்தளம் பிரதேசத்திலுள்ள குளங்களிலும், கிணறுகளிலும் நீர் வற்றிக் காணப்படுவதுடன், மக்கள் தூர இடங்களில் இருந்தே பிளாஸ்டிக் கலன்கள் மூலம் நீரை பெற்றுக் கொள்கின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X