2025 மே 23, வெள்ளிக்கிழமை

'இலங்கை தாய் நாட்டை பாதுகாப்பது இராணுவத்திலுள்ளவர்களது கடமை'

Kogilavani   / 2012 செப்டெம்பர் 26 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.மும்தாஜ், ஜூட் சமந்த, அப்துல்லாஹ்)

'பாரியதொரு யுத்தவெற்றியை பெற்று உலகளவில் கௌரவத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை இராணுவத்தின் ஒரு உறுப்பினராக இருக்கின்றமை கௌரவத்திற்குரிய விடயம். அந்த கௌரவத்தை தக்கவைத்துக் கொண்டு இலங்கைத் தாய் நாட்டை பாதுகாப்பது இராணுவத்தில் உள்ளவர்களதும், புதிதாக இணைந்து கொள்பவர்கள் அனைவரினதும் பொறுப்பாகும்' என இலங்கை இராணுவத்தின் கொழும்பு பிரதேச 3ஆம் பிரிவின் கட்டளையிடும் அதிகாரி லெப்டினன் கேர்ணல் யூ.பி.ஆர். வீரகோன் தெரிவித்தார்.

புத்தளம் விஜயபாகு பயிலுனர் இராணுவ முகாமில் பயிற்சியினை முடித்துக் கொண்ட 64வது குழுவினரின் பிரியாவிடை வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

3 மாதகால பயிற்சியை முடித்துக்கொண்ட 72 இராணுவ வீரர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை இராணுவத்தில் சேவையில் இணைந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X