2025 மே 23, வெள்ளிக்கிழமை

அநுராதபுரம் தண்டவாளத்தில் தீ

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 26 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம், சாலியவௌ - பண்டாரிபுளியங்குளம் பிரதேசங்களுக்கு இடையிலான ரயில் தண்டவாளத்தில் பொருத்தப்பட்டுள்ள சிலிப்பர் கட்டைகள் தீப்பற்றி எரிந்ததில் அவ்வழியினூடான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஏற்பட்ட இந்த தீயினால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சிலிப்பர் கட்டைகள் எரிந்துள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிரதேசத்தில் நிலவும் கடுமையான வறட்சியே இந்த தீப்பற்றலுக்கு காரணம் என கூறப்படுகின்றது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (உபுல், ரோஹன)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X