2025 மே 23, வெள்ளிக்கிழமை

வட மத்திய மாகாண சபை தவிசாளராக பேர்டியின் நம்பிக்கையாளர் தெரிவு

Super User   / 2012 ஒக்டோபர் 02 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மத்திய மாகாண சபையின் தவிசாளர் பதவிக்கு ஐக்கிய தேசிய கட்சியால் முன்மொழியப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.சிறிபால 11 மேலதிக வாக்குகளினால் மாகாண சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வட மத்திய மாகாண சபையின் கன்னி அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன்போதே வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்காவின் நம்பிக்கைக்குரியவரான சிறிபால - சபை தவிசாளாராக தெரிவு செய்யப்பட்டார்.

வட மத்திய மாகாண சபையின் தவிசாளர் பதவிக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பி;ன் போது, சிறிபால 21 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினரான அமரகீர்த்தி அதுகேரல 10 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் திசாநாயக்காவும் அவரின் நம்பிக்கையான மாகாண சபை உறுப்பினர்களும் சிறிப்பாலவிற்கு வாக்களித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் ஐக்கிய தேசிய கட்சியினால் முன்மொழியப்பட்டவருக்கு முன்னாள் முதலமைச்சர் திசாநாயக்கா வாக்களித்திருப்பாரா என்பது தொடர்பில எனக்கு தெரியாது என வட மத்திய மாகாண எதிர்க்கட்சி தலைவர் கே.நெல்சன் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் ஜயந்த மரசிங்க வட மத்திய மாகாண சபையின் பிரதி தவிசாளராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். (யொஹான் பெரோ, அதுல பண்டார, ரொஹான் சந்திரதாஸ)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X