2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

வட மேல் மாகாண சபையில் மு.கா உறுப்பினர்களில் இருவர் அரசுக்கு ஆதரவு

Super User   / 2012 நவம்பர் 06 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்லாஹ்)

வட மேல் மாகாண சபையில் ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸின்  உறுப்பினர்களில் இருவர் ஆளும் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான எஸ்.ஏ.எஹ்யா மற்றும்  ரிஸ்வி ஜவஹர்ஷ ஆகியோர் ஆளும் கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய அரசாங்கத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்த போதிலும் வட மேல் மாகாண சபையில்  கடந்த இரண்டு வருடங்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர்ந்திருந்தது.

"எனினும் வட மேல் மாகாண சபையினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் புறக்கணிப்படுகின்றனர். இதனால் கட்சி தலைமையின் அனுமதியுடன் மாகாண சபையின் ஆளும் கட்சியின் வரிசையில் அமர்வது என தீர்மானித்தோம்" ' என மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஏ.எஹ்யா தெரிவித்தார்.

எனினும் ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸின் வட மேல் மாகாண சபை  உறுப்பினர் தஸ்லீம் சபையின் எதிர்க்கட்சி வரிசையிலேயே இன்று அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸின் வட மேல் மாகாண சபையின் குழு தலைவர் எஹ்யாவிடம் வினவியதற்கு, அடுத்த அமர்விலிருந்து ஆளும் கட்சி வரிசையில் அமர்வதாக உறுப்பினர் தஸ்லீம் உறுதியளித்துள்ளார் என்றார்.

இதேவேளை, தமிழக கூடன்குளத்தில் அமைக்கப்படவுள்ள அனுமின் நிலைத்தினால் கற்பிட்டி பிரேதச மக்கள் பாதிக்கப்படவுள்ளமை தொடர்பில் சபையின் கவனத்திற்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஏ.எஹ்யா கொண்டுவந்தார்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகருடன் கலந்துரையாடி நல்லதொரு முடிவை அறிவிக்குமாறும் எஹ்யா வட மேல் மாகாண முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • MADURANKULI KURAKAAR Wednesday, 07 November 2012 07:39 PM

    கட்சி தாவுவது ஆளும் கட்சிக்கு ஆதரவு அளிப்பது எல்லாம் அரசியலில் சகஜம்.. அரசியல் என்பது சாக்கடை போயி அரசியல் என்பது குரங்காக ஆகிவிட்டது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .