2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதியின் பிறந்ததினத்தையொட்டி புத்தளம் மக்களுக்கு பல்வேறு உதவிகள்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 30 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை  முன்னிட்டு புத்தளம், கல்லடிப் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்போது தேனீ வளர்ப்புக்கான பெட்டிகள், மிருக வளர்ப்புக்காக காசோலை மூலம் பணம்,  70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் உடையவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள், பாடசாலை மாணவர்களுக்கு பரிசில்கள் ஆகிய நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

புத்தளம் மாவட்ட செயலகமும் புத்தளம் பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த  இதற்கான நிகழ்வில் வடமேல் மாகாணசபை உறுப்பினர் சிந்தக மாயாதுக்க, புத்தளம் பிரதேசசபை உறுப்பினர்கள், புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மலிக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .