2025 மே 23, வெள்ளிக்கிழமை

பாரம்பரிய கலாசாரத்தை பாதுகாத்து சுற்றுலா துறையை முன்னோக்க திட்டம்

Super User   / 2012 டிசெம்பர் 02 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

வட மத்திய மாகாணத்தின் பாரம்பரிய கலாசாரத்தை பாதுகாத்து சுற்றுலாத் துறையை முன்னோக்கும் நோக்கில் 24 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், வழிகாட்டல்  ஆலோசனைகள் உட்பட தேவையான சகல வசதிகளையும் பூர்த்தி செய்து கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி வட மத்திய மாகாணத்தில் 5 விசேட சுற்றுலா வலயங்கள் தெரிவு செய்யப்பட்டு அவ்விடங்கள் அழகுப் பிரதேசங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

வில்பத்து சரணாலயம், ஹொரவப்பொத்தானை யானைகள் காப்பரன், ஹபரன சுற்றுலா வலயம், ரிட்டிகல யானைகள் சரணாலயம் மற்றும் பொலன்னறுவையிலுள்ள புனித பூமி  பகுதி ஆகிய இடங்களே இத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, இலங்கை சுற்றுலா பயணிகள் சபை மற்றும் தனியாரின் உதவிகளையும் பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை வட மத்திய மாகாணத்தில் இயற்கைச் சூழலுடன் கூடிய அழகுப் பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டு புதிய சுற்றுலாத் தலங்களாக அபிவிருத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X