2025 மே 23, வெள்ளிக்கிழமை

கல்வித்துறையை முன்னேற்ற கௌரவிப்பு நிகழ்வு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 05 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

வடமத்திய மாகாணத்திலுள்ள கல்வித் துறையை முன்னேற்றும் நோக்கில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க மாகாண கல்வி அமைச்சர் பேஷல ஜயரத்ன திட்டமிட்டுள்ளார்.

இதன்படி சிறந்த பாடசாலை, சிறந்த அதிபர், சிறந்த ஆசிரியர், சிறந்த மாணவன், ஒவ்வொரு துறையிலும் திறமையைப் பெறுவோர், விடுமுறை பெறாது சேவையில் ஈடுபடுவோர் ஆகிய துறைகளை முன்வைத்து கௌரவிப்பு நிகழ்வுகள் நடாத்தப்படவுள்ளன.

கோட்டம், வலயம், மற்றும் மாகாண மட்டத்தில் இக்கௌரவிப்பு நிகழ்வுகளை நடாத்தவும், திறமையானவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடி இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X