2025 மே 23, வெள்ளிக்கிழமை

பரஹதெனியவில் பதற்றம்

Super User   / 2012 டிசெம்பர் 05 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(இ.அம்மர்)

குருநாகல் மாவத்தகம பரஹாதெனியவில் பொலிஸாருக்கு எதிராக மக்கள் டயர்களை எரித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, அவ்வீதியினூடாக போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரியொருவர் இன்றிரவு 8.45 மணியளவில் மோட்டார் சைக்கிள் சாரதி;யை கடுமையாக தாக்கியுள்ளார். இதனை அவதானித்த பிரதேசவாசிகள் பொலிஸ் அதிகாரியை தாக்கியுள்ளனர். அத்துடன் பொலிஸ் அதிகாரியின் செயற்பாட்டை கண்டித்து வீதிகளில் டயர்களை எரித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்தே அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் சமாதானத்தை ஏற்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • meenavan Wednesday, 05 December 2012 05:36 PM

    மோட்டார் சைக்கிள் சாரதி சிகிச்சைக்கான உரிய செலவினை, போலிஸ் அதிகாரிக்கு வழங்க மறுத்தாரோ......????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X