2025 மே 23, வெள்ளிக்கிழமை

தில்லையடி, ரத்மல்யாயப் பகுதிகள் வெள்ளத்தினால் பாதிப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 06 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

தொடர்ந்து பெய்துவரும் மழைக் காரணமாக புத்தளம் பிரதேச சபைக்குற்பட்ட தில்லையடி, ரத்மல்யாயப் பகுதியிலுள்ள பெரிய குளம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு உடைப்பெடுத்ததுடன் அக் குளத்தை அண்டிய ரத்மல்யாய மற்றும் அல்காசிமி சிட்டி ஆகிய கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இதனால், இக்கிராமத்தை சேர்ந்த சிலர் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

வெள்ளத்தால் பாதிப்புற்ற குறித்த கிராமங்களுக்கு புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் பியசாந்த, முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் வை.ஜெனவ்பர், பாலாவி கிராம உத்தியோகத்தர் சேவியர் உள்ளிட்டோர் விஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டதுடன், இது பற்றி புத்தளம் மாவட்ட செயலாளருக்கம் அறிவித்தனர்.

புத்தளம் மாவட்ட செயலாளரின் பணிப்புரைக்கமைய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புத்தளம் காரியாலய அதிகாரிகள் குறித்த இடத்திற்கு வருகை தந்துநிலமைகளை பார்வையிட்டனர்.

அத்துடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அல்லது ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாக தமக்கு விபரங்களை திரட்டித் தருமாறு கிராம சேவகரிடம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புத்தளம் காரியாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X