2025 மே 23, வெள்ளிக்கிழமை

சுத்தமான குடிநீரை வழங்கும் விசேட வேலைத்திட்டம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 11 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)
வடமத்திய மாகாணத்தில் சிறுநீரக நோய் வெகுவாகப் பரவியுள்ள பகுதிகளுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்றை  தேசிய நீர்ப்பாசன சபை முன்னெடுத்துள்ளது.

இவ்வேலைத் திட்டத்திற்கு  ஒத்துழைப்பு வழங்குமாறு தனியார் மற்றும் நன்கொடையாளர்களிடம் தேசிய நீர்ப்பாசன சபையின் வடமத்திய மாகாண முகாமையாளர் எல்.எல்.ஏ.பீரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறுநீரக நோய் வெகுவாகப் பரவியுள்ள விலச்சி, தந்திரிமலை, பில்லாவ, சந்தமல்எலிய மற்றும் நெலும்வில பகுதிகளிலேயே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் ப்ளாஸ்டிக் தாங்கிகள் வைக்கப்பட்டு நிர்ப்பாசன சபையினால் நீர் நிரப்பப்படுவதோடு சில பகுதிகளில் நீர் நிரப்பும் சிறிய ப்ளாஸ்டிக் தாங்கிகளும் வழங்கப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X