2025 மே 22, வியாழக்கிழமை

மாகுறுஓயா ஆறு பெருக்கெடுப்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 19 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(இ.அம்மார்)


தற்போது பெய்துவரும் அடை மழை காரணமாக குருநாகல் மாவட்டத்தில் வாரியப்பொல மற்றும் மாஸ்பொத பிரசேயலாளர் பிரிவில் பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

மாஸ்பொத்த என்ற இடத்தில் மாகுறுஓயா ஆறு பெருக்கெடுத்துள்ள நிலையில், வெள்ளத்தில் சிக்குண்டிருந்த இரு பிள்ளைகள் விமானப் படையினரின் ஹெலிகொப்டர் மூலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மாஸ்பொத பிரதேச செயலாளர் பிரிவில் அலுத்பொதகம என்ற இடத்தில் 110 குடும்பங்கள் வீடுகள் மூற்றாக வெள்ளத்தில் முழ்கின. இதில் 24 குடும்பங்களை வெள்ளத்திலிருந்து மீட்க முடியாமல் சிக்குண்டிருந்தனர். இவர்களை கடற்படையினர் மற்றும் பொலிஸார் சேர்ந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

குருநாகல் பொலிஸ் பிரிவில் கொக்கெட்டுவ என்ற பிரதேசத்தில் சுமார் 32 குடும்பங்கள் வெள்ளத்தில் சிக்குண்டுள்ளனர். இரவுவேளை எனவும் பாராமல் இங்கு சிக்குண்டுள்ளவர்களை கடற்படை மற்றும் பொலிஸார் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

குருநாகல் நகர் மற்றும் ஏனைய பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்காக பிரதி அமைச்சர் ஜயரத்ன ஹேரத் மற்றும் குருநாகல் மாநகர சபை உறுப்பினரும் குருநாகல் மாவட்ட சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார், வடமேல் மாகாண விவசாய அமைச்சர் டி.பீ.ஹேரத், குருநாகல் பிரதேச சபைத் தவிசாளர் பெட்ரிக் கருணாசிங்க, குருநாகல் பொலிஸ் உயர் அதிகாரிகள், குருநாகல் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள்  சென்று மக்களுக்குத் தேவையான அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அதேவேளை கொழும்பு - குருநாகல் வீதியில் குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு சமீபத்திலுள்ள பாலம் உடைந்துள்ளதால் பாதை மூட்பட்டுள்ளது. இவ்வைத்தியசாலையில் சுமார் 12 வாட் பிரிவுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X