2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கலென்பிந்துனுவெவ கிவுளேகடக்குளம் உடைப்பெடுப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 28 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
(ஆகில் அஹமட்)


அநுராதபுர மாவட்டத்திலுள்ள கலென்பிந்துனுவெவ கிவுளேகடக்குளம் உடைப்பெடுத்துள்ளதால் குளத்தை அண்டிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் இப்பகுதியிலுள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் சென்றுள்ளனர்.  இக்குளத்தில் 7000 ஏக்கர் அடி நீர் நிரம்பியிருந்த நிலையிலேயே நேற்று வியாழக்கிழமை உடைப்பெடுத்துள்ளது.

இக்குளத்தின் நீர் யான்ஓயாவில் போய்ச்சேர்வதால் யான்ஓயாவின் நீர்மட்டம் உயர்வடைந்து மேலும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கலாமென அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.

வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரக்கோன் உள்ளிட்ட அதிகாரிகள் உடைப்பெடுத்துள்ள இக்குளத்தை நேரில்ச் சென்று பார்வையிட்டார். அத்துடன்,  பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறும் அதிகாரிகளுக்கு வடமத்திய மாகாண முதலமைச்சர் பணித்துள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .