2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தீ விபத்தில் மனைவி மரணம்; கணவர் காயம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

பள்ளம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யோதகெலே என்னும் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இன்று திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது கணவர் தீக்காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

பிரியங்கா தீபானி (வயது 31) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவர்.

உயிரிழந்த பெண்ணும் அவரது கணவரும் உறங்கிக்கொண்டிருந்த வேளையிலேயே தீ பரவியதாக பள்ளம பொலிஸார் தெரிவித்தனர்.

தீக்காயங்களுக்குள்ளான இவரும் இவரது கணவரும் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் இப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது கணவர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொலிஸார் கூறினர்.

இத்தீ விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .