2025 மே 22, வியாழக்கிழமை

காணி, வீடு தந்தால் முஸ்லிம்கள் வெளியேற தயார்

Super User   / 2013 ஜனவரி 08 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

தமக்கு பிரிதொரு இடத்தில் காணி மற்றும் வீடுகள் தந்தால் தாம் அநுராதபுரம், மல்வத்து லேன் பகுதியிலிருந்து வெளியேற தயாராகவுள்ளதாக இந்த பிரதேசத்திலுள்ள முஸ்லிம் குடும்பங்கள் தெரிவித்துள்ளன.

அநுராதபுரம், மல்வத்து லேன் பள்ளிவாசலையும் அதனை சூழவுள்ள முஸ்லிம் குடும்பங்களையும் வெளியேறுமாறு கோரி கடந்த சனிக்கிழமை அநுராதபுரத்தில் பிக்குகள் தலைமையிலான குழுவினரால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து கிழக்கு நுவரகம் பிரதேச செயலாளருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது  இப்பிரச்சினைக்கு 3 மாதங்களுக்குள் தீர்வொன்றை பெற்று தருவதாக உறுதியளித்தார்.

இது தொடர்பாக வட மத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோனிற்கும் அநுராதபுரம் பெரிய பள்ளிவாசல் நிருவாக சபைக்கு இடையில் நேற்று இடம்பெற்றது.

மல்வத்து லேன் பகுதியிலுள்ள முஸ்லிம் குடும்பங்களை வேறு இடத்திற்கு வெளியேற்றுவதாக இருந்தால் முஸ்லிம்கள் செறிந்து  வாழும் பகுதிகளில் அவர்களுக்கு காணி மற்றும் வீடுகளை வழங்க வேண்டும் என்று பெரிய பள்ளிவாசல் நிருவாக சபை இதன்போது முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் இந்த விடயம் தொடர்பாக தான் ஜனாதிபதியை சந்திக்கும் போது தெரிவிப்பதற்காக மகஜர் ஒன்றைத் தருமாறும் கோரியுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X