2025 மே 22, வியாழக்கிழமை

மல்வத்துஓயா லேன் பள்ளிவாசலுக்கு இனந்தெரியாத குழுவினர் சேதம் விளைவிப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 09 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம். சீ. சபூர்தீன்                        

அநுராதபுரம் மல்வத்துஓயா லேன் பள்ளிவாசல் இன்று புதன்கிழமை அதிகாலை   இனந்தெரியாத குழுவினரால் சேதமாக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிவாசலின் கூரை மீது ஏறிய இனந்தெரியாத குழுவினர் பள்ளிவாசலின் முன்பகுதியை தாக்கி சேதமாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக அநுராதபுரம் தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இப்பள்ளிவாசல் கடந்த செப்டெம்பர் மாதம் ஹஜ் பெருநாள் தினத்தன்று அதிகாலை வேளையில் இன்நதெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டது.

இதேவேளை, கடந்த சனிக்கிழமை பிக்குகள் தலைமையிலான குழுவொன்று இப்பள்ளிசாலை அகற்றுமாறும் அங்குள்ள முஸ்லிம் மக்களை வெளியேறுமாறும் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X