2025 மே 22, வியாழக்கிழமை

மாணவர்களிடமிருந்து பணம் அறவிடுதற்கு தடை

Kogilavani   / 2013 ஜனவரி 12 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்                      

வடமத்திய மாகாணப் பாடசாலைகளில் அனுமதிக்கப்பட்ட வசதிக் கட்டணங்களை தவிர அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பன மாணவர்களிடமிருந்து பணம் அறவிடுதல் இவ்வருடத்திலிருந்து தடைசெய்யப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்வி அமைச்சர் பேஷல ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் பல்வேறு காரணங்களைக் காட்டி மாணவர்களிடமிருந்து ஆயிரக் கணக்கில் பணத்தை அறவிடுவதோடு இதனால்  பொருளாதார வசதி குறைந்த பெற்றோர் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் இதனைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் தான் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை சில பாடசாலைகளில் அடிக்கடி சிரமதானங்கள் நடைபெறுவதாகவும் இதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் பாடசாலை மாணவர்களை 12 பிரிவுகளாகப் பிரித்து அம்மாணவர்களின் பெற்றோர்கள் மாதத்திற்கு ஒரு தடவை சிரமதானத்திற்குச் செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் மாகாண கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X