2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மகளை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற இராணுவ வீரர் மீது தந்தை கத்திக்குத்து

Menaka Mookandi   / 2013 ஜனவரி 18 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

12 வயதுதான தனது மகளை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற இராணுவ வீரர் ஒருரை தந்தை கத்தியால் குத்திய சம்பவமொன்று ராஜாங்கனை, யாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் போது காயமடைந்த இராணுவ வீரர் ராஜாங்கனை கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, சிறுமியின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சிறுமியின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் மேற்படி இராணுவ வீரர், அச்சிறுமியின் வீட்டுக்குச் சென்று அவரது கையடக்கத் தொலைபேசியிலிருந்த பாலியல் தொடர்பான வீடியோக்களை சிறுமிக்கு காண்பித்த நிலையில் அவரை வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.

இதன்போது, குறித்த சிறுமி சத்தமிட்டு கத்தியதை அடுத்து அங்கு விரைந்த சிறுமியின் தந்தை, இராணுவ வீரரை தப்பிச் செல்ல விடாது தடுத்து கத்தியால் குத்தியுள்ளார்.

சந்தேகநபரான இராணுவ வீரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கான சிகிச்சைகள் முடிவடைந்ததும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராஜாங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0

  • K.Balendran Friday, 18 January 2013 11:13 AM

    ராஜாங்கனை, யாய பகுதி எண்டபடியால் தப்பினார். அங்காலைப் பக்கம் எண்டால் கத்தி வைச்சிருந்ததையும் குற்றமாக்கி வீட்டுக்குள்ளை இருந்து குண்டும் எடுத்திருப்பாங்கள்.

    Reply : 0       0

    MADURANKULI KURANKAR Saturday, 19 January 2013 06:59 PM

    பாலேந்திரென். பஹிடி விடுரியெல்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .