2025 ஜூலை 09, புதன்கிழமை

கார் மோதியதில் இராணுவ வீரர் பலி

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 07 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

மதுரங்குளி, வஜிரவத்த பிரதேசத்தில் இன்று புதன்கிழமை காலை சொகுசு கார் ஒன்று மோதியதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இராணுவ வீரர், பனாகொட இராணுவ முகாமுக்கு கடமைக்கு செல்ல வீதியில் காத்திருந்த போது அநுராதபுரமிருந்து கொழும்பு நோக்கி சென்ற கார் ஒன்று அவர் மீது மோதியுள்ளது.

இதனையடுத்து பலத்த காயங்களுக்கு உள்ளான இராணுவ வீரர், புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான கார், நிறுத்தாமல் பயணித்த நிலையில் பதுளு ஓயா பிரதேசத்தில் கடமையிலிருந்த போக்குவரத்து பொலிஸார் பிடிக்கப்பட்டு காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .