2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பலிப்பூஜை இம்முறை இரத்து: நிர்வாகம்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 07 , பி.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜுட் சமந்த

முன்னேஸ்வரம் காளி கோவிலில் வருடாவருடம் நடத்தப்படும் பலிப்பூஜையை இம்முறை நடத்தாமல் விடுவதற்கு கோவில் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

புத்தளம் மாவட்ட பொலிஸ் அதிகாரிகளுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையில் புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரி கித்சிறி கதேகம, சிலாபம் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி சாலிய சில்வா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சிலாபம்,முன்னேஸ்வரம் காளி கோவிலில ஓவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் பலிப்பூஜை நடத்தப்படும். இந்த பூஜை நடத்தப்படுவது தொடர்பில் பல்வேறு அமைப்புகள் தங்களுடைய எதிர்ப்புக்களை வெளிக்காட்டியிருந்தனர்.

இந்த பலிப்பூஜைக்கு எதிராக தேரர்கள் இந்த ஆலயத்திற்கு முன்பாக ஒருமுறை சத்தியாக்கிரக போராட்டத்திலும் ஈடுபட்டனர். அத்துடன், மிருக வதைக்கு எதிராக அமைப்பொன்று தாக்கல் செய்த மனுவை விசாரித்த சிலாபம் நீதவான் நீதிமன்றம் பலிப்பூஜையை கைவிடுமாறு 2011 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

அத்துடன், காளிக்கோவிலுக்கு சென்ற அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையிலான குழுவினர் அங்கு பலிப்பூஜைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த மிருகங்களை பலவந்தமாக எடுத்துச்சென்றுவிட்டார்.

இவ்வாறான நிலையிலேயே இம்முறை பலிப்பூஜையை நடத்தினால் பல்வேறு எதிர்ப்புகளுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும் என்பதனால் பலிப்பூஜையை நடத்தாமல் விடுவதற்கு இம்முறை ஆலயம் நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .