2025 மே 15, வியாழக்கிழமை

பேத்தியை தாக்கியவரை கைதுசெய்ய நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 09 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

தனது பேத்தி ஒருவரை கோடரியால் தாக்கிவிட்டு தலைமறைவாகியுள்ளதாகக் கூறப்படும் தாத்தாவை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை நவகத்தேகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.  

நவகத்தேகம, வெலேவெவ பிரதேசத்தை சேர்ந்த சிரியானி (வயது 17) என்ற யுவதியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

இவர் தற்போது நவத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வியாழக்கிழமை மாலை இந்தப் பேத்திக்கும் அவரது தாத்தாவுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து  கோடரியால் பேத்தியை தாத்தா தாக்கி காயப்படுத்தியுள்ளதாக தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுபவரின் மனைவியும் பாதிக்கப்பட்டுள்ள யுவதியின் பாட்டியும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நவகத்தேகம பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு  சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார்,  சந்தேக நபரை தேடிக் கைதுசெய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை நவகத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .