2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

போதைப் பாவனையிலிருந்து மீட்பது குறித்து ஆராயும் கூட்டம்

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 09 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்கு இனைவாக புத்தளம் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனைக்கு உட்பட்டுள்ளவர்களை அதிலிருந்து மீட்பது தொடர்பாக ஆராயும் கூட்டம் இன்று புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் போது சிகரெட், மது, போதைப்பொருள் பாவனையில் ஈடுப்பட்டுள்ளவர்களினை மீட்பது தொடர்பாகவும், சிறுவர்களினை போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாப்பது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

இந்நிகழ்வில் வடமேல் மாகாண போதைப்பொருள் தடுப்பு அதிகாரி திருமதி. என்.நவரத்ன, புத்தளம் மாவட்ட சமூர்த்தி அதிகார சபையின் பணிப்பாளர் திருமதி. சந்தநாயக்க, புத்தளம் மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் சந்தன பத்திரகே உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X