2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஓய்வுபெற்ற அதிபர் குத்திக்கொலை

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

76 வயதுடைய ஓய்வுபெற்ற அதிபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்கப்பள்ளி எனும் பிரதேசத்திலேயே இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து குறித்த இடத்திற்குச் சென்ற பொலிசார் கொலை செய்யப்பட்டவர் வசித்து வந்த வீட்டிலிருந்து அவரது சடலத்தை கைப்பற்றியுள்ளனர்.

குறித்த ஓய்வுபெற்ற அதிபர் தனது வீட்டில் தனியாகவே வசித்து வந்துள்ளார் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.  இக்கொலைக்கான காரணம் என்ன என்பது தொடர்பிலோ கொலையாளி தொடர்பான விபரங்களோ இதுவரைக் கிடைக்கவில்லை எனத் தெரிவித்த பொலிஸார் கொலை செய்யப்பட்டவரின் மூத்த மகன் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தற்சயம் பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்டவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X