2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கடதாசியை உற்பத்தி தொழிற்சாலை அமைக்க அரசாங்கம் கவனம்

Super User   / 2013 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அநுராதபுரம் மாவட்டத்தில் கடதாசியை உற்பத்தி தொழிற்சாலையொன்றை அமைக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என பிரதி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

வட மத்திய மாகாணத்திலுள்ள விவசாய நிலங்களிலிருந்து பெறப்படும் வைக்கோலை மூலப்பொருளாக பயன்படுத்தும் வகையிலேயே இந்த கடதாசியை தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

மாகாணத்தில் அதிகளவிலான வைக்கோல்கள் வீணாக எரிக்கப்பட்டு வருகிறது. எனவே இதனைக் கருத்திற் கொண்டு அநுராதபுரத்தை கேந்திர நிலையமாகக் கொண்டு புதிய தொழிற்சாலையொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இதனூடாக அநேகமானோருக்கு மேலதிக வருமானமும் தொழில் வாய்ப்பும் கிடைப்பதற்கு சந்தர்ப்பம் உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0

  • அப்பாவி Wednesday, 21 August 2013 02:44 PM

    வைக்கோல் மூலம் கடதாசி செய்வது சுற்றுச்சூழலை மிகக் கடுமையாகப் பாதிக்கும் என்பதால்தான் வாழைச்சேனை கடதாசி ஆலை இன்று இவ்வளவு மோசமான நிலைமைக்குக் கொண்டுவரப்பட்டது என்பதை பிரதியைமைச்சர் அறியாரோ!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X