2025 மே 15, வியாழக்கிழமை

நாட்டில் மீன்பிடி செயற்பாடு அதிகரிப்பு: அமைச்சர் ராஜித்த

Super User   / 2013 செப்டெம்பர் 11 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

நாட்டில் இன்று மீன்பிடி செயற்பாடு அதிகரித்துள்ளது என மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

"லைலா வலை, வெளிச்சம் பாவித்து மீன்பிடித்தல், கூடுகளினை பாவித்து மீன்பிடித்தல் போன்ற நடவடிக்கைகள் தற்போது நாட்டில் கட்டுப்படுத்தப்படடுள்ளன. இதனாலேயே மீன்பிடி அதிகரித்துள்ளது" என அவர் குறிப்பிட்டார்.

"3 இலட்சத்து 39 ஆயிரம் மெட்றிக் தொண்னாக காணப்பட்ட மீன்பிடி இன்று 4 இலட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 1 இலட்சத்து 70 ஆயிரமாக காணப்பட்ட மீன்பிடி கைத்தொழில் இன்று 2 இலட்சத்து 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது" என அவர் தெரிவித்தார்.

அத்துடன் 48 ஆயிரமாக காணப்பட்ட மீன்பிடி இயந்திர படகுகள் இன்று 62 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அவ்வாறாயின் ஜே.வி.பியினர் கூறுவது போல் எவ்வாறு மீன்பிடி கைத்தொழில் வீழ்ச்சியடைந்துள்ளது? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
கல்பிட்டி பிரதேசத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

சில அரச சார்பற்ற நிறுவனங்கள் மீனவர்களினை குழப்பத்துக்குள்ளாக்கி அவர்களினை அரசு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்படுத்த முயற்சி செய்கின்றனர். இது தொடர்பில் மீனவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

இன்று இந்திய மீனவர்கள் எனக்கு எதிராக ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். ஆனால் நான் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு பயப்பட போவதில்லை. எல்லை மீறிவரும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து நான் பின்வாங்கப் போவதில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .