2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

தங்கநகைகளை திருடியவர் கைது

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 29 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

தங்கநகைகளையும் கையடக்கத் தொலைபேசியையும்  திருடியதாகக் கூறப்படும் பெண் ஒருவரை வெள்ளிக்கிழமை இரவு  கைதுசெய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

தனது நண்பி ஒருவருக்குச் சொந்தமான தங்கநகைகளையும் கையடக்கத் தொலைபேசியையும் சந்தேக நபர் திருடியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். 

சந்தேக நபர் சுமார் மூன்று இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தங்கநகைகளையும் கையடக்கத் தொலைபேசியையும் திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிலாபம், முகுனுவட்டவான் பிரதேசத்தில் வசிக்கும் பங்கதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிலாபம், முகுனுவட்டவான் பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்துவந்த தனது சிநேகிதியான சந்தேக நபரின் வீட்டில் சில தினங்கள் தான் தங்கியதாகவும் கடந்த 23ஆம் திகதி மாலை இத்திருட்டு இடம்பெற்றதாகவும் தங்கநகைகளை பறிகொடுத்தவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அன்றையதினம் தனது சிநேகிதியான சந்தேக நபரின் வீட்டுக்கு அவரது காதலன் மற்றொரு நபருடன் வந்து மது அருந்திவிட்டுச் சென்றதாகவும் அதன் பின்னர் தான் உறங்கச் சென்று மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது கட்டிலின் மெத்தைக்கு கீழ் தங்க நகைகளும் கையடக்கத் தொலைபேசியும் வைக்கப்பட்ட கைப்பை காணாமல் போயிருந்ததாகவும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணையை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X