2025 மே 14, புதன்கிழமை

மாணவியை வல்லுறவுக்குட்படுத்திய சந்தேகநபருக்கு விளக்கமறியல்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 31 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்
 
15 வயதுடைய பாடசாலை மாணவியொருவரை வல்லுறவுக்குட்படுத்திய ஆசிரியர் ஒருவரை அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெப்பித்திகொள்ளாவ மாவட்ட நீதவான் கயான் மீகஹகே (நேற்று 30) உத்தரவிட்டார்.
 
நிக்கவௌ பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
கடந்த 18ஆம் திகதி, 15 வயதுடைய பாடசாலை மாணவி டியூஷன் வகுப்பிற்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சந்தேக நபர் மாணவியை கடத்திச் சென்று பஹள குமுக்கொள்ளாவ குளத்துப் பகுதியில் வைத்து வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.
 
சம்பவம் தொடர்பாக ஹொரவப்பொத்தானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்ததோடு சந்தேக நபர் சட்டத்தரணியூடாக 29ஆம் திகதி பொலிஸாரிடம் சரணடைந்தார்.
 
ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவ மஹனாமவின் ஆலோசனைப்படி சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .