2025 மே 14, புதன்கிழமை

சட்டவிரோத கசிப்பு விற்பனையாளர் கைது

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 03 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து அங்கிருந்து சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 120 போத்தல்களில் அடைக்கப்பட்ட கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மாரவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முதுகட்டு பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே இந்தச் சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

மாரவில, கட்டுநேரி பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி  சந்தேக நபர் 6 மாதங்களுக்கு முன்னர் மாரவில முதுகட்டு பிரதேசத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார்.  வேறு இடங்களில் உற்பத்தி செய்யப்படும் சட்டவிரோத கசிப்பை வாடகை வீட்டுக்கு கொண்டுவந்து அங்கிருந்து மொத்தமாக விற்பனை செய்யும்; நடவடிக்கையில் சந்தேக நபர் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்ட சமயமும் சந்தேக நபர் கசிப்பு மொத்த விற்பனைக்காக தயார் செய்து கொண்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .