2025 மே 14, புதன்கிழமை

வவுனியா-கொழும்பு பஸ்கள் மீது இன்றும் கல்வீச்சு

Kanagaraj   / 2013 நவம்பர் 16 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

வவுனியாவிலிருந்து கொழும்பு பயணிக்கும் தனியார் பஸ்கள் மூன்றாவது நாளாகவும் இன்று சனிக்கிழமை அதிகாலை கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை அதிகாலை 5.15 மணியளவில் வவுனியாவிலிருந்து கொழும்பு சென்ற பஸ்கள் மீது ஆராச்சிகட்டுவ பகுதியில் வைத்து கற்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்றவர்களே ஆராச்சிகட்டுவ பகுதியில் வைத்து இவ்வாறு தாக்குதல் நடாத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிசார் தெரிவித்தனர்.

இத் தாக்குதலில் பயணிகளுக்கோ, சாரதி மற்றும் நடத்துனருக்கோ எவ்விதமான எவருக்கும் காயங்களும் ஏற்படவில்லை என்று தெரிவித்த பொலிசார் பஸ்களுக்கு சேதம் எற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .