2025 மே 14, புதன்கிழமை

புத்தளம் வாவியில் அதிவலு மின்கம்பங்கள்; எதிர்த்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 22 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்


நுரைச்சோலை அனல்மின் நிலையத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு மின்சாரத்தைக் கொண்டு செல்வதற்காக புத்தளம் வாவியில் அதிவலு மின்கம்பங்கள் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளத்தில் மீனவர்கள் மற்றும் பொது மக்கள் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் இன்று ஈடுபட்டனர்.

புத்தளத்திலுள்ள மூன்று மீனவச் சங்கங்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர். இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையினைத் தொடர்ந்து புத்தளம் கடற்கரை வீதியில் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான மீனவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலிருந்து புத்தளம் ஏரியினூடாக மின்சாரத்தினை வெளி மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்கான மின்கம்பங்கள் புத்தளம் வாவியில் நிறுவப்படவிருப்பதால் அது தங்களது மீனவத் தொழிலுக்குப் பெரும் பாதிப்பாக அமையும் எனத் தெரிவித்தே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புத்தளம் இபுனு பதூதா வீதியில் மீனவர்கள் வீதியை மறித்து மீனவப் படகுகள் வள்ளங்களையும் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு படகு ஒன்றும் வள்ளம் ஒன்றும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீயிட்டுக் கொழுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாசும் கலந்து கொண்டார்.

இந்த திட்டத்திற்கு தாம் எதிர்ப்பில்லை எனவும், தமது தொழிலுக்குப் பாதிப்பில்லாத வகையில் வேறு வழியில் இந்த அதிவலு மின் கம்பங்களை அமைப்பதற்கு தாம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .