2025 மே 14, புதன்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் கான்ஸ்டபிள் பலி

Kanagaraj   / 2013 நவம்பர் 26 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் வண்ணாத்திவில்லு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றுமொரு கான்ஸ்டபிள் படுகாயமடைந்திருப்பதாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் வீதியின் 4 ஆம் கட்டைப் பிரதேசத்திலேயே இவ்விபத்து நேற்று திங்கட்கிழமை இரவு 11 மணியளவில்  இடம்பெற்றுள்ளது.

கரடிப்புவல் பிரதேசத்தின் 6 ஆம் கட்டைப் பகுதியில் வீதிச் சோதனைச் சாவடியில் பணியாற்றிக் கொண்டிருந்தவரே சம்பவத்தில் பலியாகியுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் சிக்சிய இவ்விரு பொலிஸாரும் உடனடியாக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களுள் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார். மற்றைய பொலிஸ் கான்ஸ்டபிள் சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில்  புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .