2025 மே 14, புதன்கிழமை

கசிப்பு தயாரித்தவர் கைது

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 28 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

கசிப்பு தயாரிப்பில்  ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் ஒருவரை நேற்று புதன்கிழமை இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச்சந்தேக நபர் 15 வருடங்களாக இத்தாலியில் தொழில் புரிந்து விட்டு தாயகம் திரும்பிய நிலையிலேயே கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சந்தேக நபரிடமிருந்து கசிப்பும்  கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று புதன்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஸ்வாடிய பிரதேசத்தில் இச்சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்.

கொஸ்வாடி, தித்தகொல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள மாடி வீடொன்றில் சில காலமாக இச்சந்தேக நபர் சட்டவிரோதமாக கசிப்பு தயாரித்து வந்துள்ளார். மேலும்,  சந்தேக நபர் காஸ் அடுப்பை பயன்படுத்தி  கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.  

இச்சந்தேக நபர் பாதுகாப்புக் கருதி  6 நாய்களை வளர்த்து வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .