2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஹெரோயின் பக்கற்றுகளுடன் கைதான சட்டத்தரணிக்கு பிணை

Kanagaraj   / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரத்தில் ஹெரோயின் பக்கற்றுகள் மூன்றுடன் கைதான சட்டத்தரணி நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

திருமணம் முடித்த 35 வயதான கே.ஏ. அமில உபேக என்றழைக்கப்படும் சட்டத்தரணியே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இரகசிய தகவல்களை அடுத்தே குறித்த சட்டத்தரணியை சாலியபுர பரசங்கஸ்வௌ வீட்டில் வைத்தே விசாரணைக்காக பொலிஸார் நேற்று கைது செய்தனர்.

பொலிஸார் அவரை அநுராதபுரம் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தியபோது அவரை ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலைச்செய்யுமாறு அநுராதபுரம் மேலதிக நீதவான் சந்திம எதிரிமான உத்தரவிட்டதுடன் விசாரணையை ஜனவரி மூன்றாம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .