2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

இசைக் கச்சேரியில் பாடவந்த பாடகரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 09 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

இசைக் கச்சேரி ஒன்றில் பாடகராக கலந்து கொள்ள வந்த ஒருவருக்குச் சொந்தமான பெறுமதிமிக்க மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு வென்னப்புவ பொரலஸ்ஸ பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வென்னப்புவ பொரலஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற இசைக் கச்சேரி ஒன்றில் பாட்டுப் பாடுவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வந்து தனது சைக்கிளை இசைக்கச்சேரி மேடைக்கருகில் நிறுத்திவிட்டு பாடல் தனக்குரிய பாடல் நிகழ்ச்சி முடிவடைந்து வந்து பார்த்த போது தனது மோட்டார் சைக்கிளைக் காணவில்லை என வென்னப்புவ லுணுவில பிரதேசத்தைச் சேர்ந்த தொன் சுபசிங்க துஷார (வயது 34) என்பவர் சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் வெய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இத்திருட்டு யாரால் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை விபரங்கள் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கும் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X